சஹஜ் தியானம் செய்வது மிக சுலபம் . தவிர்க்கமுடியாத சில குழப்ப நிலை, தருணங்கள் வரும் பொழுது மனம் தெளிவாக்க உதவுகிறது.
ஷகுன் பந்த், வானொலி புரவலர், தில்லி, 27சஹஜ் சமாதி தியான யோகா
மேம்படுத்துங்கள் மன அமைதி • உடல் நலம் • மன தெளிவு • உள்ளுணர்வு திறன்கள்
*உங்கள் நன்கொடை பல சமூகப் பணிகளுக்கு பயன்படுகிறது
பதிவு செய்யஇந்த பயிற்சி எனக்கு எந்த விதத்தில் உதவும்?
மேம்பட்ட மன அமைதி
சஹஜ் சமாதி பயிற்சியினால், நம் மூளை அதிர்வலைகளை, அமைதிதரும் -ஆல்பா அதிர்வலை நிலைக்கு கொண்டு வரப்பட்டு, நரம்பு மண்டலம் அமைதியுற்று , மனதும் உடலும் ஆழ்ந்த ஓய்வையும், புத்துணர்ச்சியையும் அடைகிறது.
மனத்தெளிவு அதிகரிக்கும்
இடையறாத நீரோடையாக பிரவாகிக்கும் எண்ணங்கள் தியானத்தினால் அமைதியுற்று, மனத்தெளிவையும் அதிக விழுப்புணர்வையும் பெறுகிறது. சஹஜ் சமாதி மூலம், உங்கள் கவனம் செலுத்தும் திறன், சுய விழிப்புணர்வு, மற்றும் சிறப்பாக முடிவெடுக்கும் திறன் ஆகியவை மேம்படுவதை அனுபவ ரீதியாக உணர்வீர்கள்.
மேம்பட்ட உடல் நலம்
நம்முடைய நரம்பு மண்டலம்; நமது உடலுக்கு சக்தி தரும் மின்னாக்கி
அதாவது ஜெனரேட்டர். நரம்பு மண்டலம் தளர்வாகவும், புத்துணர்ச்சியுடனும்
செயல்படும் நிலையில் இருக்கையில் (அது) நமது உடல், இருதயம், இரத்தகுழாய் மற்றும் சுவாச அமைப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
வெளிகொணர்ந்த உள்ளுணர்வு திறன்கள்
சஹஜ் சமாதி பயிற்சி மனதில் எழும் தேவையற்ற படபடப்புகளை நீக்கி, உங்கள் உள்ளார்ந்த குரலை கண்டறியவும், உங்கள் உள்ளுணர்வு, உங்கள் பகுத்தறிவை வலுப்படுத்தவும் உதவுகிறது.
இது எப்படி வேலை செய்கிறது
தியானம் என்பது இளைப்பாரும் கலை. எந்தவித முயற்சியிலும் ஈடுபடாமல் இருக்கும் கலை; ஆனால் பொதுவாக மக்களுக்கு முயற்சியில் ஈடுபடாமல் இருப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. தியானம் செய்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன; ஆனால் சஹஜ் சமாதியில் நாம் ஆழ்ந்த ஓய்வு நிலையை அடைய மந்திரங்களை பயன்படுத்துகிறோம். இந்த தியானபயிற்சியில் தனிப்பட்ட மந்திரம் உங்களுக்கு வழங்கப்படும். மற்றும் அதை தியானத்திற்கு எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பதும் கற்பிக்கபடும். மந்திரம் உங்களை விழுப்புணர்வின் ஆழ்ந்த நிலைக்கு அழைத்து செல்லும் வாகனம் ஆகிறது. நீங்கள் தன்னுள் ஆழமாக போக போக பேரின்பம், தெளிவு, அமைதி, உள்ளுணர்வு, படைப்பாற்றல் ஆகியவை மேலோங்கி வரும், பின்னர் நீங்கள் உண்மையில் யார் என்பதை கண்டுணர்வீர்கள்.
இந்த தியானபயிற்சியில் எந்த பாடநெறிகள் அடக்கம்?
- உங்கள் தனிப்பட்ட மந்திரத்தின் அடிப்படையில் தியான நுட்பம்
- தியானத்தின் முக்கிய நுட்பங்கள்
- மனதில் எந்த காரணங்களினால் குழப்பநிலை உருவாகுகிறது என்பதையும் அதன் தீர்வுகளையும் அடையாளம் காணுதல்.
- எவ்விதம் பல்வேறு விதமான உணவுவகைகள் மனதையும், எண்ணங்களையும் பாதிக்கின்றன (என்பதை பற்றிய அறிவு)
முன்பு, தியானம் பற்றி எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. சஹஜ்சமாதி தியானத்திற்குப் பிறகு, நான் மிக எளிதாக தியானம் செய்கிறேன், மேலும் சமாதியின் ஆழமான நிலைக்குச் செல்வதற்கு நமக்கென ஒரு தனிப்பட்ட மந்திரம் இருப்பது ஒரு பாக்கியம்.
நிதிஷ் கைர்நார்
தரவு அறிவியல் நிபுணர், மும்பை
முழுமையான மௌன நிலைக்குள் செல்லும் அனுபவத்தை சஹஜ் மூலம் நான் பெற்றேன். ஒரு மந்திரம் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த அனுபவம் நானே பெறும் வரை நான் உணரவில்லை.
சௌமியா கோத்தா
ஆட்சேர்ப்பு வல்லுனர்
எனது முதல் சஹஜ் தியானத்தின் நினைவு இன்னும் பசுமையாகவே உள்ளது. எனது தனிப்பட்ட சஹஜ் மந்திரத்துடன் தியானம் செய்வதிலிருந்து வரும் மகிழ்ச்சி எப்போதும் இந்த அற்ப சந்தோசங்களுக்கு அப்பாற்பட்டது. இது என் எண்ணங்களைத் தெளிவுபடுத்துவதோடு, அமைதியின்மை மற்றும் அன்றாட மன அழுத்தத்தைக்…
கிருஷ்ண திலீப்
டிஜிட்டல் சந்தைப்படுத்துபவர், ஹைதராபாத்
நிறுவனர்
குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
நான் சேரவேண்டும் ஆனால்...
சஹஜ் சமாதியை கற்க நான் தியான பயிற்சியாளராக வேண்டுமா?
அவசியமில்லை. நீங்கள் இதுவரை தியானம் செய்யாதிருந்தாலும், இந்த நுட்பத்தை நீங்கள் கற்றுக்கொண்டு, அதன் பலன்களை பெறலாம்.
சஹஜ் சமாதி தியானம், வழி காட்டல் தியான முறைகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது ?
வழிகாட்டல் தியான முறைகளில் வாய்மொழி அறிவுறுத்தல்கள், மற்றும் இசை உங்களை தியானநிலைக்கு அழைத்துப்போக உபயோகப்படுத்தபடுகின்றன. இதனால் உருவாகும் ஒரு இனிமையான மற்றும் அமைதியான சூழல்; உங்கள் மனம் ஓய்வெடுக்க மற்றும் தளர்வடைய உதவி செய்கிறது. மறுபுறம் சஹஜ் சமாதி தியானப்பயிற்சி மந்திரத்தின் அடிப்படையில் உருவானது. மந்திரம் உங்கள் உணர்வுகளை ஒரு ஆழ்ந்த நிலைக்கு அழைத்து செல்லக்கூடிய ஒரு சக்தி ஊட்டப்பட்ட துல்லியமான ஒலியாகும். வழிகாட்டல் தியானத்திற்கு, வழிகாட்டி தேவை; ஆனால் சஹஜ் சமாதி தியானம் பயிற்சியை கற்றுக்கொண்ட பிறகு, நீங்கள் சுயமாக தியானம் செய்ய முடியும். இதற்கு நீங்கள் தினமும் இருபது நிமிட நேரமும், வீட்டில் ஒரு அமைதியாக உட்கார்வதற்கு வசதியான இடமும் தான் தேவை . பயிற்சி தினமும் செய்ய தொடங்கியபின் நீங்கள் அதிக அமைதியுடன் இருப்பதை உணர முடியும் . மேலும் உங்கள் உடல் நிலை ,மதி நுட்பம் ,விழிப்புணர்வு, கூர்ந்த உள்ளுணர்வு, திறன்கள் அனைத்திலும் மேம்பாட்டை காணுவீர்கள் .
என்னால் தியானம் திறம்பட செய்ய முடியவில்லை. நான் எப்பொழுது தியானம் செய்தாலும் உறங்கி விடுகிறேன்
நீங்கள் தியானம் பயிற்சி மேற்கொள்ளும்போது தூங்கினால் தவறு ஒன்றும் இல்லை. அது உங்கள் அமைப்பிற்கு ஓய்வு வேண்டும் என்று குறிக்கிறது. ஆனால் தியானம் செய்வதை மட்டும் நிறுத்தாதீர்கள். நீங்கள் இந்த பயிற்சியை தொடர தொடர பல மணி நேரம் தூக்கத்தினால் கிடைக்கும் புத்துணர்ச்சி, இருபது நிமிட சஹஜ் செய்வதினால் கிடைப்பதை (அனுபவ ரீதியாக) உணர்வீர்கள்.
சஹஜ் சமாதி தியானத்திற்கு ஏதாவது விசேஷமான பரிசீலனை தேவையா ?
முடிந்தளவு வயிறு காலியாக இருப்பது விரும்பத்தக்கது. உணவு அருந்தும் முன் அல்லது உணவு அருந்திய ஒன்றரை மணி நேரம் கழித்து, சஹஜ் சமாதி தியானம் செய்வதற்கு உகந்த தருணம். அதை தவிர தேவையானது நீங்கள் இருபது நிமிடம் உட்கார்ந்து தியானம் செய்வதற்கு ஒரு வசதியான இடம்.