நாம் குவாண்டம் இயற்பியலை கற்கும்போது இந்த பிரபஞ்சமே அதிர்வுகளால் ஆனது என்பதை காண்கிறோம். இவ்வதிர்வலைகளின் தொடர்ச்சியான இணைவே நம்மைச் சுற்றி காண்கின்ற உலகத்திற்கு உருவம் கொடுக்கிறது. மேலும், நாம் படைப்பின் வரிசையை புரிந்து கொள்ளும் போது, படைப்பு என்பது பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசக் கூறிலிருந்து தொடங்குகிறது என்பதை காண்கிறோம். ஆகாசத்திற்கு பிறகு காற்று கூறு வந்தது, அதற்கு பின் நெருப்பு, பின்னர் நீர், இறுதியில் நிலம். அனைத்து பருப்பொருட்களும் ஆகாசவெளியிலிருந்தே வந்தன. இந்த பரந்த ஆகாசமே படைக்கபட்ட அனைத்திற்கும் ஆதாரம் ஆன மூலக்கூறு ஆகும்.

நான்கு ஸ்தூல பூதங்களிலும் நம்மால் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். மின்விசிறியின் உதவியோடு காற்றை உணர முடியும், இரு மரக்கட்டைகளிலிருந்து நெருப்பைப் பற்ற வைக்க முடியும், நீரையும் மண்ணையும் நம்மால் தொட முடியும். ஆனால், ஆகாச தத்துவத்தில் தாக்கத்தை ஏற்படுத்த இருக்கும் ஒரே வழி அதிர்வுகளும், ஒலிகளும் தான். மந்திரம் என்னும் கருத்து வேதநூல்களுடன் நின்று விடவில்லை. உலகம் முழுவதும் அனைத்து பண்பாடுகளிலும் பாடல்களும், தோத்திரங்களும் பாடப் பட்டுள்ளன. இருந்த போதிலும், நாம் அன்றாடம் உச்சரிக்கும், கேட்கும் மந்திரங்களின் பின்னால் வேறொரு அறிவியல் உள்ளது. இந்த மந்திரங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை சற்று புரிந்து கொள்ளலாம்.

மந்திரங்கள் என்றால் என்ன? அவை எப்படி செயல்படுகின்றன?

குருதேவர்  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஒருமுறை இவ்வாறு கூறினார்: மந்திரம் என்பதன் பொருள் “மனன த்ராயதே இதி மந்த்ர:” – அதாவது மீண்டும் மீண்டும் உச்சாடனம் செய்வதன் மூலம் மாயை என்னும் கடலைக் கடக்க உதவுவது எதுவோ அதுவே மந்திரம். நம்மை மன அழுத்தத்தில் ஆழ்த்தி தொல்லை செய்து நம் ஆற்றல்  எல்லாம் வடிந்து போனது போல நம்மை உணரச்செய்யும் முரண்பாடுகளையும், மோதல்களையும் தினமும் எதிர்கொள்கிறோம். எந்தவொன்று, ஒரு போதும் எந்த சூழ்நிலையிலும், உணர்வு பெருக்கிலோ அல்லது இவ்வுலக மாயையிலோ மூழ்கி விடாமல் நம்மை காக்கின்றதோ அதனையே மந்திரம் என்று அழைக்கிறோம்.

எதை திரும்பத் திரும்ப உச்சாடனம் செய்வதால் நம் துன்பங்களையெல்லாம் கடந்து வருகிறோமோ அதுவே மந்திரம் எனப்படும்.

இம்மந்திரங்களின் பொறியியலை புரிந்து கொள்ளும்போது, இந்தி மற்றும் சமஸ்க்ருதத்தை எழுத நாம் பயன்படுத்தும் தேவநாகரி எழுத்துருவின் அடிப்படை உயிர் மற்றும் மெய் எழுத்துக்களே மந்திரங்களின் வடிவம்  தான் என்பதைப் புரிந்து கொள்கிறோம். ஆற்றல் மிகுந்த தன்னுள்  நிறைந்த இயற்கையின் ஒலிகளை முறையாக தொகுப்பதன் மூலம் பெறப்பட்டவை இவை. நம் வாழ்வின் குறிப்பிட்ட அம்சத்தில் குறிப்பிட்ட தாக்கததை ஏற்படுத்தும் வகையில் இந்த ஒலிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன.

மந்திரங்கள் எப்படி ஆகாச தத்துவத்தில் தாக்கம் செலுத்துகின்றன

நம்முள்ளும், நம்மை சுற்றி வெளிப்படும் பிரபஞ்சத்திலும் மந்திரங்கள் ஒரு நேர்மறையான மாறுதலைக் கொண்டு வருகின்றன. நம்மை சுற்றியுள்ள ஆகாச தத்துவத்தை அமைதிப்படுத்துவதன் மூலம் மந்திரங்கள் இதை செய்கின்றன.

புவி வெப்பமயமாதல் மற்றும் மாசுபாடு அளவுகள் அதிகரித்து வருவதால், நம்மைச் சுற்றியுள்ள காற்றின் தரத்தை மேம்படுத்தக்கூடிய காற்று சுத்திகரிப்பு சாதனங்களின் உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்து வருகிறது. ஆனால், நாம் ஆகாயத் தத்துவத்தை எவ்வாறு தூய்மைப்படுத்த முடியும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

காற்று மாசுபடுவதைப் போலவே நம்மை சுற்றி இருக்கும் ஆகாச தத்துவமும் நிலைகுலைந்து கொண்டேயிருக்கிறது.  ஆகாசத்தின் நிலைகுலைவின் அலகு  என்ட்ராபி எனப்படுகிறது. என்ட்ராபி அதிகமாக அதிகமாக, நிலைகுலைவும் அதிகரிக்கிறது. ஆற்றல்  வற்றிப்போனது போன்ற உணர்வு, எண்ணங்கள், யோசனைகள் ஆகியவற்றின் அலைமோதலால் நாம் ஓய்ந்துவிட்டதாக  உணர்கிறோம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட முறையில் மந்திரங்களை உச்சாடனம் செய்வதால் ஆகாச தத்துவத்தின் என்ட்ராபியை குறைக்க உதவுகிறது. இந்த மந்திரங்கள் நம்மைச் சுற்றி இருக்கு ஆகாச வெளியை மட்டுமல்லாமல், நம்முள் இருக்கும் வெளியையும் அமைதிப்படுத்துகின்றன.  ஆகவேதான், மந்திர உச்சாடனத்திற்கு பிறகு தம்முள் அற்புதமான அமைதி பரவுவதை பலர் உணர்கிறார்கள்.

உங்களைச் சுற்றியும் உங்களுக்குள்ளேயும் ஒரு அமைதியான வெளியை நீங்கள் மீண்டும் மீண்டும் உருவாக்கி கொள்ளும்போது, நிலைத்த, பரந்த அமைதியும், மகிழ்ச்சியும் வியாபிப்பதை உணர்கிறீர்கள். ஏனென்றால், அனைத்தும் ஆகாச தத்துவத்தால் உருவாக்கப்படுகின்றன. நம் உடலில் இருக்கும் செல்கள் ஒவ்வொன்றும் இந்த ஆகாச வெளியிலிருந்து உருவாகின்றது, மடியும்போதும் நம் செல்கள் அந்த வெளிக்குள்தான் செல்கின்றன. இது தான் நம் இருப்பின் ஆதாரம். இந்த ஆதாரத்தை சரி செய்யும்போது, நம் ஆளுமையிலும் படிப்படியான நேர்மறை மாற்றம் ஏற்படுகின்றது.

வெவ்வேறு மந்திரங்களும் அவற்றின் நற்பலன்களும்

வெவ்வேறு மந்திரங்கள் வெவ்வேறு அதிர்வலைகளை உருவாக்குகின்றன, இவ்வதிர்வலைகள் வெவ்வேறு நற்பலன்களைத் தருகின்றன. இந்த மந்திரங்கள், பஞ்ச பூதங்களில் (ஐந்து கூறுகள்) தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் வழியே நம் உடல் நலம், மன நலம் மற்றும் மனத்தைக் காட்டிலும் நுட்பமான, சூட்சமமான நிலைகளும் மேம்படுகின்றன. ஸ்ரீ ருத்ரம் அல்லது ருத்ர பூஜை மிக சக்தி வாய்ந்த ஒரு மந்திர உச்சாடம் ஆகும். ஆதி சங்கராச்சாரியாரே ஒருமுறை, ஸ்ரீ ருத்ரம் சிறந்த மந்திரங்களில் ஒன்று என்றும், அது முக்தியையும் அனைத்து உலகியல் சாதனைகளையும் அளிக்க வல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பநிலையாளர்களுக்கு, ஓம் நம சிவாய அல்லது ஓம் நமோ நாராயணாய அல்லது ஓம் ஸ்ரீ குர்வாயே நம போன்ற மந்திரங்களை எளிதாகக் கற்றுக்கொண்டு நீண்ட நேரம் உச்சாடனம் செய்யலாம்.

ஓம் நம சிவாய என்பதில் ந, ம, சி, வா, ய என்னும் ஐந்து பீஜ மந்திரங்கள் உள்ளன. இவை பஞ்சாங்கம் எனப்படும் ஒரு நாளின் (அல்லது காலத்தின்) ஐந்து அங்கங்களுடன் தொடர்புடையவை. தினமும் காலையில் 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஓம் நம் சிவாய என உச்சாடனம் செய்வது, அன்றைய பஞ்சாங்கத்தை மேம்படுத்தும், அன்றைய தினத்திற்கான கிரக நிலைகளின் தாக்கத்தை பார்த்துக்கொள்ளும். உங்கள் நாளை மேம்படுத்த விரும்பினாலோ அல்லது ஒரு முக்கியமான விஷயம் நடக்கப் போகும் நாள் அன்று உங்களுக்கு கூடுதல் சக்தி தேவைபட்டாலோ, அன்று காலை 10 அல்லது 15 நிமிட நேரம் ஓம் நம சிவாய என்று உச்சாடனம் செய்யவும். நீண்ட நேரம் உச்சாடனம் செய்தால், அதன் பலன் பல மடங்கு அதிகரிக்கும். இந்த மந்திரத்தின் நன்மைகளை எளிதாகப் பெற வாழும் கலை செயலியை பயன்படுத்துங்கள்.

நாம் ஏன் மந்திரங்களை 108 முறை உச்சாடனம் செய்கிறோம்?

ஜெபமாலை அல்லது ஜெபமணிகளில் 108 மணிகள் அல்லது ஒரு எண்ணினால் பெருக்கினால் 108 வரக்கூடிய எண்ணிக்கையில் மணிகள் இருக்கின்றன. மந்திர உச்சரிப்பு செய்பவர்கள்கூட 108 முறை மந்திரத்தை உச்சாடனம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். இந்த எண் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

மேலே குறிப்பிட்டபடி, மந்திரங்கள் நமக்கு உள்ளேயும் நம்மை சுற்றியும் உள்ள ஆகாயத் தத்துவத்தை தாக்கம் செலுத்துகின்றன. கிரகங்களின் தாக்கங்களும் ஆகாயத் தத்துவத்தின் மீது காணப்படுகின்றன. இந்த 108 என்ற எண் மந்திரங்களை ஜோதிடத்துடன் இணைக்கிறது. 12 ராசி மண்டலங்களும் ஒன்பது கிரகங்களும் உள்ளன. ஒரு மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதன் மூலம், ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு ராசிக்கும் இடையிலான தொடர்பு உள்ளடக்கப்படுகிறது.

108 என்ற எண்ணின் முக்கியத்துவம் இதோடு நின்றுவிடுவதில்லை, ஏனெனில் இந்த எண் வானியல் மற்றும் ஜோதிடத்தில் தொடர்ந்து காணப்படுகிறது. ஜோதிட ரீதியாக, சந்திரன் ஒரு சுழற்சியில் 108 பாதைகளைக் கடக்க வேண்டும். மேலும் ஒரு மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது, வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நம்மை மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பாதுகாக்கிறது.

மேலும், அதிகம் அறியப்படாத உண்மை ஒன்று உள்ளது. 108 என்பது படைப்பின் பொன்னான விகிதமாகும் (கோல்டன் ரேஷியோ). பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் சூரியனின் விட்டத்தின் 108 மடங்காகும். அதுபோலவே, பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் சந்திரனின் விட்டத்தின் 108 மடங்காகும். பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு இந்த பொன்னான விகிதமே காரணமாகும். சந்திரன் தொடர்ந்து தனது நிலையை மாற்றிக்கொண்டே இருக்கிறது; சந்திரன் இந்த 108 விகிதத்திற்குள் வந்தபோதுதான் பூமியில் உயிர் செழிக்கத் தொடங்கியது. மேலும், சந்திரன் இந்த 108 விகிதத்திலிருந்து விலகிச் செல்லும் நாளில், பூமியில் உயிர்கள் இல்லாமல் போய்விடும்.

சூரியன் மற்றும் சந்திரனின் இந்த அமைப்பே, உயிர்களை உருவாக்க உதவியது. இதே அம்சம் சிவராத்திரி அன்றும் காணப்படுகிறது. சிவன் மற்றும் சக்தியின் சேர்க்கையே வெளிப்பட்ட பிரபஞ்சத்தின் பின்னால் உள்ள காரணமாகும். மேலும் ஜோதிடவியலிலும் கூட, சூரியனுக்கு அதிபதி சிவன் மற்றும் சந்திரனுக்கு அதிபதி சக்தி ஆகும்.

ஜோதிடத்தின் ஒரு பொதுவான நிலைக்கு வந்தால், சூரியன் தந்தையையும், சந்திரன் தாயையும் குறிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் இருவரும் இணைந்ததே நமக்கு உயிரைக் கொடுத்தது, அதேபோல சூரியனும் சந்திரனும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் இணைந்ததே இந்த கிரகத்தில் உயிரை உருவாக்கியது. பல ஜோதிடர்கள், உங்கள் ஜாதகத்தில் சூரியனின் தாக்கத்தை மேம்படுத்த விரும்பினால், உங்கள் தந்தைக்கு சேவை செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். அதேபோல், சந்திரனின் தாக்கத்தை மேம்படுத்த, ஒருவர் தங்கள் தாய்க்கு சேவை செய்ய வேண்டும். சூரியன் மற்றும் சந்திரன், தாய் மற்றும் தந்தை ஆகியோரைப் போலவே, சிவன் மற்றும் சக்தியின் சங்கமமே இந்த முழு படைப்பிற்கும் காரணமாக அமைந்துள்ளது. இவை அனைத்தும் ஒரே மாதிரியான கூறுகள் தான், வெவ்வேறு வழிகளில் குறிப்பிடப்படுகின்றன.

நீங்கள் காயத்ரி மந்திரத்தில் தீட்சை பெறுவதற்காக உபநயனம் செய்வது போல, ஒரு மந்திரத்தில் தீட்சை பெற விரும்பினாலும், அல்லது ஒரு எளிய தினசரி மந்திரத்தை உச்சரிக்க விரும்பினாலும், அல்லது ருத்ரம் போன்ற சக்திவாய்ந்த அனுபவத்தைப் பெற விரும்பினாலும், மந்திரம் உச்சரிப்பதன் நன்மைகளை மறுக்க முடியாது. உங்கள் அன்றாட வாழ்வில் இந்த ஒரு சிறிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது பல நுட்பமான மற்றும் வெளிப்படையான நன்மைகளுக்கு வழிவகுக்கும்.

அசுதோஷ் சாவ்லா (தலைவர், ஜோதிடம் மற்றும் வாஸ்து, வைதிக தர்ம சமஸ்தானம்) அவர்களின் குறிப்புகளையும், குருதேவர்  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் ஞான உரைகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

    Wait!

    Don't leave without a smile

    Talk to our experts and learn more about Sudarshan Kriya

    Reverse lifestyle diseases | Reduce stress & anxiety | Raise the ‘prana’ (subtle life force) level to be happy | Boost immunity

     
    *
    *
    *
    *
    *